சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று தென்றல்.தீபக்,ஸ்ருதிராஜ் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ஷாமிலி சுகுமார்.இந்த தொடர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார் ஷாமிலி.

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பைரவி,வாணி ராணி,பிரியமானவன்,வள்ளி உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் ஷாமிலி.இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஷாமிலி.

ஜீ.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான பென்சில் படத்திலும் ஷாமிலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஜீ தமிழில் வெற்றிநடை போட்டு வரும் பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் ஷாமிலி.இந்த தொடரில் இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஷாமிலி தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தன் பெயரில் பலர் போலி கணக்குகளை வைத்து தேவையற்ற வேலைகளை செய்துவருவதால் , அந்த கணக்குகளை முடக்க போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் ஷாமிலி.இவருக்கு பல ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

actress shamili sukumar files complaint with police over fake social media profile