தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்  குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆகவே நடித்திருந்தார்.

இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் ரித்திகா சிங். தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான ஆண்டவன் கட்டளை திரைப்படத்திலும் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த சிவலிங்கா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்க  கதாநாயகியாக நடித்திருந்தார். அடுத்ததாக பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்கள் நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில்  ஒரு கோவில் குளத்தில் நடந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்ட ரித்திகா சிங் படிக்கட்டுகளில் இருந்த பாசியில் வழுக்கி குளத்தில் விழுந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங். அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)