பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்தன. ஹரிஷ் கல்யான் நடிப்பில் இலன் இயக்கிய பியார் ப்ரேமா காதல் படத்தில் இவர் ஹீரோயினாக அசத்தியிருந்தார். இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரைசா கைவசம் FIR, லவ், மற்றும் Alice போன்ற படங்கள் உள்ளது. 

Vishnu Vishal

இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் கெட்டப் உடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் எஃப்.ஐ.ஆர் படப்பிடிப்பை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த எஃப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். 

Raiza Wilson

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.