தென்னிந்திய திரை உலகில் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ராய் லட்சுமி நடிகர் விக்ராந்த் கதாநாயகனாக நடித்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல முன்னணி மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடைசியாக நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த மிருகா திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ராய் லட்சுமி. தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் கன்னட திரைப்படமான ஜான்சி ஐபிஎஸ் திரைப்படத்தில் ஜான்சி கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகவும் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்ததாக தமிழில் சின்ரெல்லா படத்திலும் தெலுங்கில் ஆனந்தபைரவி படத்திலும் ராய் லட்சுமி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 29 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை ராய் லட்சுமி வெளியீட்ட ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நடிகை ராய் லட்சுமி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாக பரவிவருகிறது. அந்த புகைப்படம் இதோ...
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)