மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக கவனம் ஈர்த்து வருபவர் பூஜிதா பொன்னாடா.பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்த்து வந்த பூஜிதா நடிகையாக வேண்டும் என்ற கனவில் போட்டோஷூட்கள் குறும்படங்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

2016-ஆம் ஆண்டு Darshakudu என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பூஜிதா பொன்னாடா.தொடர்ந்து ரங்கஸ்தலம்,மிஸ் இந்தியா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் பூஜிதா.ஹீரோயினாகவும் ரன்,செவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

தனது நடிப்பால்,அழகால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவராக உருவெடுத்தார் பூஜிதா பொன்னாடா.இவர் ஹீரோயினாக நடித்துள்ள Aakasa Veedullo படம் விரைவில் வெளியாகவுள்ளது.இதனை தவிர ரவிதேஜா நடிப்பில் உருவாகும் ராவணாசுரா,பவர்ஸ்டார் பவன்கல்யானுடன் ஹரிஹர வீரமல்லு,Odela Railway Station உள்ளிட்ட படங்களில் அடுத்து நடிக்கவுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் புகழ் ஆரி ஹீரோவாக நடிக்கும் பகவான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுக்கவுள்ளார்.சமீபத்திய ட்ரெண்ட் ஆக இருக்கும் ஒன்று ஆல்பம் பாடல்கள் , சினிமா பாடல்களை தாண்டி பல ஆல்பம் பாடல்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.எந்த மொழி என்பதும் இந்த பாடல்களுக்கு பெரிய தடையாக இருந்ததில்லை.

ரைத்துறையில் பிரபலமாக இருக்கும் பல இளம் மற்றும் முன்னணி நடிகைகள்,ஆல்பம் பாடல்கள் மூலம் தங்கள் திறமையை நிரூபித்து தங்களால் முடிந்தளவு ரசிகர்களை என்டேர்டைன் செய்து வருகின்றனர்.அப்படி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான பூஜிதா பொன்னாடா Zanjeere என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.Nivriti Vibes இந்த பாடலை தயாரித்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.Bheems Ceciroleo இசையில் செம கேட்சியான இந்த பாடல் வைரலாகி வருகிறது.பூஜிதா பொன்னாடாவின் இந்த பாடல் செம ஹிட் அடித்து பல மில்லியன்களை அள்ளவேண்டும் என்று கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.இளைஞர்களின் கவனம் ஈர்த்து வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்