கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ப்ரியாமணி.தொடர்ந்து தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து அசத்தி வந்தார் ப்ரியாமணி.2007-ல் வெளியான பருத்திவீரன் படத்தின் ஹீரோயினாக நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக தேசிய விருது கொடுத்து கௌரவப்படுத்தியது இந்திய அரசு.இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி அசத்தினார் ப்ரியாமணி.இவர் முஸ்தபா ராஜ் என்பவரை கடந்த 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் ப்ரியாமணி.

பெரிய திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொலைக்காட்சி தொடர்களில் நடுவராக பங்கேற்றும் அசத்தியுள்ளார் ப்ரியாமணி.Virata Parvam,Narappa,Maidaan உள்ளிட்ட முக்கிய படங்கள் இவர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ளன.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ப்ரியாமணி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.சமீபத்தில் இவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை பகிருமாறு கேட்டிருந்தார் அதற்கு சாமர்த்தியமாக உங்கள் உங்கள் அம்மா தங்கையின் புகைப்படத்தை பகிர சொல்லுங்கள் அடுத்ததாக நான் பகிர்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து அந்த ரசிகர் ப்ரியாமணியிடம் மன்னிப்பு கேட்டார்.

மற்றுமொரு ரசிகர் உங்களை திருமணம் செய்யவேண்டும் என்று செம ஜாலியாக கேள்வி கேட்க இதற்கு செம கூலாக பதிலளித்த ப்ரியாமணி,எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என் கணவரிடம் சம்மதம் கேட்டு வாருங்கள் அவர் ஓகே சொன்னால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.ரசிகர்கள் எப்படி கேள்வி எழுப்பினாலும் செம ஜாலியாக ப்ரியாமணி பதிலளிப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.