தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் பிசாசு 2. கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிவருகிறது பிசாசு 2 திரைப்படம், 

ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பூர்ணா,சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் உருவாகும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிசாசு 2 படத்தில் முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் பிசாசு 2 படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

முன்னதாக வெளியான பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று நடிகை பூர்ணா தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். விரைவில் பிசாசு 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actress poorna completed her parts in mysskin pisasu 2 shoot