தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை பூர்ணா எனும் ஷம்னா காசிம் கடந்த 2004ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மஞ்சு போலொரு பெண் குட்டி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருமான பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம் தகராறு சவரக்கத்தி லாக்கப், அடங்க மறு, காப்பான், தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜோசஃப் படத்தின் தமிழ் ரீமேக்காக R.K.சுரேஷ் நடித்து வெளிவந்த விசித்திரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூர்ணா, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை பூர்ணா தனது திருமணத்தை தற்போது உறுதி செய்துள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகை பூர்ணா தனது வருங்கால கணவரோடு இருக்கும் அந்த புகைப்படங்கள் இதோ…