மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் இதயங்களை திருடியவர் நடிகை ஓவியா. களவாணி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மன்மதன் அம்பு,கலகலப்பு , மெரினா என தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்தார் நடிகை ஓவியா.

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஓவியா தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.பிக்பாஸில் ஓவியாவின் மீது ரசிகர்கள் வைத்த அன்பின் மிகுதியால் சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி தொடங்கப்பட்டது. 

இதனையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை ஓவியா 90ML  காஞ்சனா 3, களவாணி 2  என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது புதிய வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஆரஞ்சுமிட்டாய்  என்ற பிரபல யூடியூப் சேனலில் வெளியாகும் மெர்லின் வெப்சீரிஸில் கதாநாயகியாக நடிகை ஓவியா நடிக்கும் போஸ்டரை தற்போது அந்த யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. வருகிற ஜூன் 5-ம் தேதி முதல் இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்த ஓவியாவின்  இந்த வெப்சீரிஸ் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.