அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்.தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயினாக கவனம் பெற்றிருப்பவர் நந்திதா ஸ்வேதா.அட்டகத்தி,எதிர்நீச்சல்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,முண்டாசுப்பட்டி என்று தொடர்ந்து இவர் நடித்த படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் நந்திதா.தொடர் வெற்றிகளால் தெலுங்கிலும் வாய்ப்புகள் தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் நந்திதா.விஜயின் புலி,சிலம்பரசனின் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் நந்திதா.

சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது ஒரு சோகமான செய்தியை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நந்திதா.

54 வயதான தனது தந்தை சிவசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற கவலையான செய்தியை பகிர்ந்துள்ளார்.அவரது ஆத்மா சாந்தியடைய பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை நந்திதாவின் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.