இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் சிலம்பரசனின் மாமன் மகளாக நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் நிறைந்த படமான ஐபிசி 376 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் நடிப்பது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. இப்படியிருக்க நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. 

கொரோனா வைரஸின் அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை நந்திதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

கொரோனாவின் கோர தாண்டவம் நாடு முழுவதும் உள்ளதால், மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய கலாட்டா குழுமம் வலியுறுத்துகிறது. முகக்கவசம்...நம் உயிர் கவசம் !!!