தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் நமீதா. எப்படி இருக்கீங்க மச்சான்ஸ் என்று யாராவது பேசினால் கூட, நமீதா பேசும் தொனி போல் ஒலிக்கும். கவர்ச்சியை தாண்டி நமீதாவின் க்யூட்னஸ் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்கும். கடந்த 2004-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானவர் நமீதா. 

அதனைத்தொடர்ந்து மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், பம்பரக்கண்ணாலே, அழகிய தமிழ் மகன் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சில நாட்கள் பிற மொழி படங்களில் நடித்த வந்த நமீதா. கடைசியாக பரத் நடித்த பொட்டு படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் உடல் எடை குறைத்தது பற்றியும், மனஅழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார் நமீதா.  

அவர் கூறியிருப்பதாவது : நான் கடும் மன அழுத்தத்தில் இருந்தேன். மிக மோசமான பகுதி என்னவென்றால், அதை நான் கூட அறிந்திருக்கவில்லை. இரவுகளில் என்னால் தூங்க முடியாமல் போனது. நான் உணவை அதிகம் நம்பியிருந்தேன். நான் தினமும் பிஸ்ஸாவை ஆர்டர் செய்யது சாப்பிட ஆரம்பித்தேன். திடீரென்று உடல் வடிவத்தை இழந்து உடல் பருமனானேன். 97 கிலோவாக உடல் எடை கூடியது. நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று மக்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். எனக்கு மட்டும் தான் தெரியும் PCOD மற்றும் தைராய்டு குறைபாடுகள் எனக்கு இருந்தது என்று. 

ஐந்து ஆண்டுகாலம் மனஅழுத்தத்தில் இருந்த எனக்கு மெடிடேஷன் அதாவது தியானம் தான் மனஅமைதியை தந்தது. எந்த டாக்டரையும் பார்க்கவில்லை...எந்த தெரபியும் இல்லை... தியானம் மட்டுமே என் தெரபியாக இருந்தது என பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் பெளவ் வெளவ் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா. படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார். 

இதைப்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, கட் கட் சூப்பர் என கை தட்டினர், இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா. இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டனர். கடந்த வாரம் முழுவதும் டாக்கில் இருந்தது இந்த நிகழ்வு. படத்தின் காட்சியை நிஜம் என நம்பிவிட்டனர். 

நமீதா ரசிகர்கள் பலரும் நமீதாவின் ஒவ்வொரு புது அப்டேட்ஸ் வரும் பொழுதும் பெரிதும் ஆதரவு கொடுத்து நமீதா மீது அதிகம் பாசம் கொண்டு நிறைய உதவிகளை செய்து வருகின்றனர் . ஒரு பக்கம் கட்சி , அரசியல் என்று இருந்தாலும் இன்னொரு பக்கம் சினிமா என்று மிகவும் அழகாக தனது டைம் மேனேஜ்மென்ட் பற்றி புரிந்து செயல் படுகிறார் நமீதா.