தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழ்ந்த நடிகை நமீதா, நடிகர் விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய வேடங்களிலும் நடிகை நமீதா நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

குறிப்பாக தமிழில் சரத்குமாரின் ஏய், சத்யராஜின் இங்கிலீஷ்காரன் & கோவை பிரதர்ஸ் தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன், அஜீத் குமாரின் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். முன்னதாக நடிகை நமீதா கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த நமீதா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது நடிகை நமீதாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. நமீதாவும் அவரது கணவரும் தங்களது இரட்டை குழந்தைகளை ஏந்தியபடி வீடியோ வெளியீட்டு இதனை தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)