“அது நம்முடைய புத்தாண்டு கிடையாது" நடிகை நமிதா பேச்சு.. - வைரலாகும் வீடியோ இதோ..

தமிழ் புத்தாண்டு குறித்து நடிகை நமிதா பேச்சு - Actress Namitha about tamil new year | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து இன்று தென்னிந்திய முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நமீதா அவர்கள். தமிழ் சினிமாவில் 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித் சரத் குமார், சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பலருடன் நடித்து தமிழ் சினிமாவில்  முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நமிதா. கதாநாயகியாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியது மட்டுமல்லாமல் தன் கவர்சியான நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர்.

நடிகை நமிதா சினிமா துறையில் மட்டுமல்லாமல் சின்னத்திறையிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதில் குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை நமீதா அவர்கள்  பாஜக செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டும் வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதனுடன் சேர்ந்து  “நம்ம எல்லோரும் டிசம்பர் 31 இரவு வெளியே சென்று கோலாகலமாக புத்தாண்டு தினத்தை கொண்டாடுகிறோம். ஆனால் அது நமது கலாச்சாரம் கிடையாது.நாம் எல்லோரும் இந்தியர்கள். நம்முடைய கலாசாரம் எல்லாம் ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவது தான். அது ரொம்ப பக்கத்துல இருக்கு.. நீங்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் அதை கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெறுங்கள். அதன்பிறகு முழு நாளையும் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.  31 டிசம்பர் நம்முடைய புத்தாண்டு கிடையாது, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுதான் நமது புத்தாண்டு! அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வணக்கம்” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு  வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Namitha Vankawala (@namita.official)

வடசென்னை படத்தில் அல்லு அர்ஜுன்?.. உண்மையை உடைத்த வெற்றிமாறன் – அட்டகாசமான தகவல்களுடன் விவரம் உள்ளே..
சினிமா

வடசென்னை படத்தில் அல்லு அர்ஜுன்?.. உண்மையை உடைத்த வெற்றிமாறன் – அட்டகாசமான தகவல்களுடன் விவரம் உள்ளே..

இரண்டாவது வாரத்தில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வசூல் நிலவரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

இரண்டாவது வாரத்தில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் வசூல் நிலவரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – விவரம் இதோ..

‘அயோத்தி’ படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் சசிகுமாரின் பதில்.. – விவரம் இதோ..
சினிமா

‘அயோத்தி’ படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் சசிகுமாரின் பதில்.. – விவரம் இதோ..