தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை நமீதா, நடிகர் விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடிகை நமீதா சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். குறிப்பாக தமிழில் சரத்குமாரின் ஏய், சத்யராஜின் இங்கிலீஷ்காரன் & கோவை பிரதர்ஸ் தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன், அஜீத் குமாரின் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய நடிகை நமீதா கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நமீதாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதனை நமீதாவும் அவரது கணவரும் தங்களது இரட்டை குழந்தைகளை ஏந்தியபடி வீடியோ வெளியீட்டு இதனை தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது தனது செல்ல மகன்களுக்கு நமீதா பெயர் சூட்டியுள்ளார். கடவுள் கிருஷ்ணரின் பரிசாக பிறந்துள்ள தனது செல்ல மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்து தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)