விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் அவர் நடித்த மைனா ரோல் அதிகம் பாப்புலர் ஆன நிலையில் அதுவே அவரது பெயருடன் இணைந்துவிட்டது. தற்போது விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் காமெடியன் ரோலில் நடித்து வருகிறார் அவர். சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

மைனா நந்தினி சமீபத்தில் விஜய் டிவி விருது விழாவில் பங்கேற்றபோது மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் அதிகம் திண்டாடியதாக கூறிய அவர், குழந்தை பிறந்து 15 நாட்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க சென்றுவிட்டதாக எமோஷனலாக கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த முறை அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். 

இந்நிலையில் தற்போது வயதான ஜோடி போல மேக்கப் போட்டு மைனா மற்றும் கணவர் யோகேஸ்வர் இருவரும் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை அவர் வெளியிட, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வித்யாசமான மேக்கப்பில் மைனா இருக்கும் மற்றொரு புகைப்படமும் பாராட்டை பெற்று வருகிறது.

போட்டோஷூட்களில் வித்தியாசம் காட்டி வரும் பிரபலங்களுக்கு விமர்சனம் ஏராளம். சமீபத்தில் குக் வித் கோமாளியில் வரும் பவித்ரா லக்ஷ்மி, புடவையை வெட்டி போட்டோஷூட் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)