தொலைக்காட்சி சேனல்களில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நந்தினி என்ற மைனா.சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற காதாபாத்திரத்துக்கும்,இவரது காமெடி டைமிங்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் மைனா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி 3, டார்லிங் டார்லிங்,ப்ரியமானவள்,நீலி,நாம் இருவர் நமக்கு இருவர்,சின்னத்தம்பி என்று அனைத்து முன்னணி சேனல்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் நந்தினி. மைனா நந்தினிக்கும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக நந்தினி லாக்டவுன் நேரத்தில் தெரிவித்தார். அதன் பிறகு அவருக்கு அண்மையில் வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நந்தினி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். திருமணம், கர்ப்பம், குழந்தை பிறந்த பிறகு போட்டோஷூட் நடத்துவது தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினியும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அந்த போட்டோஷூட்டின் போது எடுத்த புகைப்படங்களை நந்தினியும், யோகேஸ்வரனும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தனர். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மைனா நந்தினி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவரின் கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். நந்தினிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நந்தினியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்ல விஷயம் நடப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மைனா நந்தினி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் வரும் காட்டுப் பயலே பாடலுக்கு நின்ற இடத்திலேயே நின்றபடி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, நிறைமாத கர்ப்பிணி டான்ஸ் எல்லாம் ஆடக் கூடாது மைனா என்றார்கள். நந்தினிக்கு டான்ஸ் ஆடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் டான்ஸ் ஆடுவதை பார்க்க ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

தான் டான்ஸ் ஆடிய வீடியோக்களை நந்தினி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வார். கர்ப்பமான பிறகு டான்ஸ் ஆடுவதை நிறுத்திவிட்டார். ஆனால் தன் மாமியார், நாத்தனார், கணவர் ஆகியோரை டான்ஸ் ஆடச் செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நந்தினி. அந்த வீடியோவை பார்த்தவர்கள், அடேங்கப்பா நந்தினியின் மாமியார் சூப்பராக டான்ஸ் ஆடுகிறாரே என்றார்கள்.