90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா.1999-ல் தல அஜித்துடன் ஹீரோயினாக உன்னை தேடி படத்தின் மூலம் அறிமுகமானார் மாளவிகா.வெற்றி கோடி கட்டு படத்தின் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகையானார் மாளவிகா.

தொடர்ந்து ரோஜாவானாம்,லவ்லி,சீனு,அனந்த பூங்காற்றே என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார் மாளவிகா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் மாளவிகா.

2007-ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் மாளவிகா.திருமணத்திற்கு பிறகும் நான் அவன் இல்லை,வியாபாரி,திருமகன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இதனை தவிர சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும்,முக்கிய வேடங்களிலும் நடித்து வந்தார் மாளவிகா.சித்திரம் பேசுதடி படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய வாளமீனுக்கும் பாடல் இன்றும் பலரது பேவரைட் ஆக இருக்கிறது.

2009-க்கு படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கணவரையும்,குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு வருகிறார் மாளவிகா.என்றாலும் இவருடைய ரசிகர்கள் இவர் மீண்டும் நடிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் இவரது பிகினி புகைப்படங்கள் வெளியாகி நல்ல ட்ரெண்ட் அடித்தது.தற்போது தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கிவிட்டதாகவும் , அதில் தனது விறல் முறிந்துள்ளது என்றும் இதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)