தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை லட்சுமிமேனன். மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவரான நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமான கும்கி, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டிய நாடு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா, கார்த்தி கதாநாயகனாக நடித்த கொம்பன், அஜித் குமாரின் வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

மீண்டும் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த லட்சுமிமேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புலிக்குட்டி பாண்டி.  இதனையடுத்து லட்சுமிமேனன் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா. நடிகை லக்ஷ்மி மேனன் நடித்துள்ள புதிய திரைப்படமான ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ள ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்திருக்கும் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்திற்கு சந்திர குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி உருவாகியிருக்கும் லக்ஷ்மி மேனனின் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது.

இந்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா திரைப்படம்  ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள லட்சுமிமேனனின் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா பட விறுவிறுப்பான ட்ரைலர் இதோ...