தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் S.J.சூர்யா. முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.T.R. நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான மாநாடு திரைப்படத்தில் தனுஷ்கோடி எனும் காவல்துறை அதிகாரியாக மிரட்டலாக நடித்த S.J.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து S.J.சூர்யா நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. மேலும் பொம்மை & கடமையை செய் என S.J.சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக நடிக்கும் S.J.சூர்யா, அமிதாப்பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் S.J.சூர்யா தற்போது புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

வால் வாச்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள வதந்தி வெப் சீரிஸில் S.J.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க, சஞ்சனா & நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடநடித்துள்ளனர்க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸான வதந்தி வெப் சீரிஸை இயக்குனர் ஆண்ட்ரூ லுயிஸ் எழுதி இயக்கியுள்ளார். 

விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள இந்த வதந்தி வெப்சீரிஸில் பிரபல தமிழ் நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முன்னதாக சமீபத்தில் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்த லைலா இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் வதந்தி வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.