கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கிரண். அதனைத்தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், தென்னவன், திருமலை போன்ற படங்களில் நடித்து அசத்தினார். வெகு நாட்கள் பிற மொழிகளில் பிஸியாக இருந்தவர் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 

kiran

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Kiranrathod

இந்நிலையில் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமலை படத்தில் இடம்பெற்ற வாடியம்மா ஜக்கம்மா பாடலை பகிர்ந்து சமூக விலகலை கடைபிடிப்பது குறித்து பதிவு செய்துள்ளார். இப்பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No touching keep social distancing #socialdistancing#lockdown#funny

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on