சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கிரண்.கோலிவுட்டின் கனவுக்கன்னியாக சில வருடங்கள் வலம் வந்தார்.தொடர்ந்து முக்கிய படங்களில் நடித்து அசத்தினார் கிரண்.

அஜித்துடன் வில்லன்,கமலுடன் அன்பே சிவம் என்று இவர் தொடர்ந்து நடித்த படங்களும் சூப்பர்ஹிட் அடித்தன.தமிழ் தவிர ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என்று அனைத்து முக்கிய மொழிகளிலும் நடித்து அசத்தினார் கிரண்.திருமலை,திமிரு உள்ளிட்ட சில படங்களில் பாடல்களில் மற்றும் வந்து சென்று அசத்தினார் கிரண்.

அடுத்து சில வருடங்கள் நடிப்புக்கு முழுக்குபோட்டு வந்த கிரண்.கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து விஷாலின் ஆம்பள,சுந்தர் சியின் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் கிரண்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கிரண்,தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவர் ஜனவரி 11ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)