2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி.அதே வருடத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து இவர் கயல் அனந்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட தொடங்கப்பட்டார்.

தொடர்ந்து இவர் நடித்த சண்டிவீரன்,திரிஷா இல்லனா நயன்தாரா,விசாரணை,எனக்கு இன்னொரு பேர் இருக்கு,பண்டிகை,மன்னர் வகையறா,பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம்,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு பிரபல தொழிலதிபரும்,அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குனருமான சாக்ரடீஸ் உடன் திருமணம் கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றுள்ளது.இவர் தெலுங்கில் நடித்த ஜாம்பி ரெட்டி,தமிழில் கமலி From நடுக்காவேரி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தமிழில் இவர் நடித்துள்ள நதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.