விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தை இயக்குனர் A.L.விஜய் இயக்கியுள்ளார். 

தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.நடிகர் அரவிந்த்சாமி ,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடிகை பூர்ணா, சசிகலா கதாபாத்திரத்திலும் நடிகை மதுபாலா ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
தலைவி ரிலீஸ் பற்றிய பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தலைவி படத்தின் கதாநாயகி கங்கனா ரனாவத் தற்போது அதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம் நம்ப வேண்டாம் கட்டாயமாக திரையரங்குகள் நாடு முழுவதும் திறந்தவுடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் நன்றி என தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படவுள்ள நிலையில் திரையரங்குகள் திறந்ததும் தலைவி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actress kangana ranaut answers about thalaivi release date rumours