கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். ஏழை எளிய மக்களுக்கு கடினமான சூழல் உருவாகியிருக்கிறது என்றே கூறலாம். 

harathi

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகை ஆர்த்தி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். திரையில் தனது காமெடியால் கட்டி ஈர்த்த ஆர்த்தி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். 

harathi

தற்போது தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். ஆர்த்தியின் இந்த நற்செயலை பாராட்டி, அவர் பகிர்ந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். திரையில் காமெடி பாத்திரத்தில் தெரிந்தாலும், நிஜ வாழ்வில் ஹீரோவாக விளங்கும் கணேஷ்கர் மற்றும் ஆர்த்தியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Come on friends let's all help each other... #happygiving

A post shared by #Actress Harathi (@actress_harathi) on