தமிழ் திரையுலகில் சிறந்த காமெடி நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. பல படங்களில் தனது நகைச்சுவையால் ஈர்த்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். இந்நிலையில் ஆர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் பேசுகையில், சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டும்தான் இது மக்களுக்கு. ஆனா இந்த சினிமாவையே நம்பி இருக்கற பல்லாயிரம் குடும்பங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம். இந்த கஷ்டமான காலகட்டத்துல் முன்னணி நடிகர்கள் பலர் தங்களுடைய சம்பளத்தை 25-லிருந்து - 40 சதவிகிதம் வரை குறைச்சிருக்காங்க. என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள்.

Actress Harathi Decides To Get One Rupee Salary

பெரிய பிள்ளையாருக்கு முன்னால சின்ன எலி மாதிரி, சரி சரி ஒத்துக்கறேன், சின்ன இல்லை பெருச்சாளின்னே வைச்சிக்கங்க. என்னோட மனசாட்சிப்படி நானும் ஒரு முடிவை எடுத்திருக்கேன். இனிமே ஒரு வருஷத்துக்கு நான் நடிக்கற எல்லா படத்துக்கும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமா வாங்கிக்க போறேன், ஆமா வெறும் ஒரே ஒரு ரூபாய் தான். இதுல ஒரு காரணம் இருக்கு. வெளிலேர்ந்து பாக்கறப்ப சினிமா எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும்.  என்னோட சின்ன பங்களிப்பு இதுதான்.

Actress Harathi Decides To Get One Rupee Salary

இனி ஆர்த்தி பட்ஜெட் ஜாஸ்தியா இருக்கும்னு யாரும் யோசிக்க வேண்டாம். எந்த கண்டிஷன்ஸ் அப்ளையும் இதுல கிடையாது.  ஆனா ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட், என்னோட ஒரு சீன் ப்ளான் பண்ணும் போது மட்டும் ஒரு பத்து எக்ஸ்ட்ரா கலைஞர்களுக்கும் சேர்த்து நீங்க வேலை கொடுக்கணும்.

நான் வாங்கப் போறது ஒரு ரூபாதான். ஆனா அந்த பத்து கலைஞர்களுக்கு ஷேர் பண்ணி கொடுத்தா சந்தோஷம். நம்ம கலைஞர்களுக்கு உழைக்கணும். வேலை செஞ்சு டெய்லி கிடைக்கறது கொஞ்சம் பணம்தான். அதை வைச்சுத்தான் குழந்தைகளை படிக்க வைக்கறாங்க. கெளரவமா வாழ்றாங்க. அதனால என் ஒத்த ரூபா கான்செப்ட் பலருக்கான ஷேரிங்கா இருந்தா சந்தோஷப்படுவேன் என்று ஆர்த்தி கூறியுள்ளார்.