பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக உயர்ந்த நடிகை ஹன்சிகா மோத்வானி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம்  தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் மான் கராத்தே அரண்மனை, ரோமியோ ஜூலியட் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

actress hansika motwanis maha to release in theatre

அடுத்ததாக ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகிறது “மஹா”. இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடிக்க ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சிலம்பரசன் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் .மாதங்களுக்கு முன்பு வெளியான இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா மோட்வானி புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று சர்ச்சைக்குள்ளானது. இயக்குனர் ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு  R.மதி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் U.R.ஜமீல் இயக்குகிறார். 

 

சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் அவர்களது சமூக வலைதளப் பக்கங்களில் மஹா திரைப்படத்தை குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.மஹா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்ததாகவும்,அடுத்ததாக இத்திரைப்படம் OTT-யில் வெளியாக தயாராகி வருவதாகவும் வெளியிட்டனர். ஆனால் இதனை மறுத்துள்ளார் இயக்குனர்  U.R.ஜமீல். 

“மஹா திரைப்படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகிறது. இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர்   சிலம்பரசனின் ரசிகர்கள் தனக்கும் தன்னுடைய மஹா திரைப்படத்திற்கும் கொடுத்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா திரைப்படம் கட்டாயமாக தியேட்டரில்தான் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.