குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், தளபதி விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவின் சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர். கடைசியாக நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த 100 திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக  நடிகை ஹன்சிகா மற்றும் நடிகர் சிலம்பரசன் இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது சமீபத்தில் வெளியான மகா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் அடுத்ததாக நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது. 105 மினிட்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போஸ்டர் இன்று வெளியானது. 

இன்று 105 மினிட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் ருத்ரேஷ் & போமக் சிவா இணைந்து தயாரிக்க இயக்குனர் ராஜு துஸ்ஸா இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் கிஷோர் போயிட்பு ஒளிப்பதிவு இசை அமைப்பாளர் சாம்.C.S. இசையமைக்கிறார் அடுத்தடுத்து இப்படத்தில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.