தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை திவ்ய பாரதி. முன்னதாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமடைந்த திவ்யா பாரதி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக களமிறங்கினார்.

இதனைத் தொடர்ந்து வெப்பம் திரைப்படத்தின் இயக்குனர் அஞ்சலி அலிகான் இயக்கத்தில் பிக் பாஸ் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் மதில் மேல் காதல் திரைப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். ரிலீஸ்க்காக காத்திருக்கும் மதில் மேல் காதல் திரைப்படம் அடுத்த ஆண்டில் (2023) ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகை திவ்யா பாரதியின் உடல் வாகை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக வேண்டி தனது உடலை அதற்கு ஏற்ப அறுவை சிகிச்சை செய்து மாற்றியுள்ளதாக குறிப்பிட்டு அவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்களையும் கமெண்டுகளையும் சிலர் கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார். அதில் தனது கல்லூரி சமயத்தில் கல்லூரி இறுதி நாளில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட SLAM BOOKல் அவரது நண்பர்கள் அப்போது இருந்தே திவ்ய பாரதியின் உடல்வாகு இப்படி இருப்பதாக தெரிவித்து எழுதி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அப்போது இருந்தே என்னுடைய உடல்வாகு இப்படியாக இருப்பதாக தெரிவித்து பதிவிட்டுள்ளார் நடிகை திவ்ய பாரதியின் அந்த முழுபதிவு மற்றும் புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Divyabharathi (@divyabharathioffl)