தந்தையுடன் சேர்ந்து புலியை விரட்டும் அதுல்யா ரவி ! வீடியோ உள்ளே
By Sakthi Priyan | Galatta | April 03, 2020 13:28 PM IST

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் 9-ம் நாளில் நடிகை அதுல்யா ரவி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தையுடன் சேர்ந்து புலியை விரட்டுவது போன்றும், கரடியுடன் சேர்ந்து அமர்ந்திருப்பது போன்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அதுல்யா ரவி. இவரது நடிப்பில் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அடுத்ததாக நடிகர் ஷாந்தனுவுடன் நடிக்கவுள்ளார். லிப்ரா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
Keerthy Suresh reveals her quarantine partner - picture goes viral!
03/04/2020 02:00 PM
Shah Rukh Khan's well thought out coronavirus relief plan wins hearts
03/04/2020 01:40 PM