தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஆண்ட்ரியா.வெறும் கமர்ஷியல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா.

இவர் கடைசியாக நடித்த அரண்மனை 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் ஹீரோயின் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

தனது நடிப்பால் தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் ஆண்ட்ரியா.மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆண்ட்ரியா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது பாத்டப்பில் இருப்பது போல சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.