மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் டெல்னா டேவிஸ்.அடுத்ததாக சில தமிழ் படங்களில் நடித்து அசத்தினார் டெல்னா டேவிஸ்.குரங்கு பொம்மை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் டெல்னா.

அடுத்ததாக சில வருடங்கள் படிப்பிற்காக பிரேக் எடுத்த டெல்னா, சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார்.பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் டெல்னா.

இந்த தொடரில் விராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரேஷ்மா பசுபுலேட்டி,சங்கீதா,ப்ரீத்தா,ராகவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்த தொடரில் புது எண்ட்ரியாக பிரபல நடிகை அம்பிகா நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஏற்கனவே சன் டிவியின் நாயகி தொடரில் நடித்து அசத்தியிருந்த இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார்.மீண்டும் இவர் சன் டிவி தொடரில் ரீ என்ட்ரி தருவது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.