துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் அந்த காலகட்டத்தில் அவருடைய தோற்றத்திற்காக உருவ கேலி செய்யப்பட்டார். பின்பு பல  பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து  தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் தனுஷ். 

"ராஞ்சனா" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த நடிகர் தனுஷ் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து "ஷமிதாப்" திரைப்படத்திலும் கலக்கினார் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அட்றாங்கிரே  திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த "தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பக்கீர்" திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில்  காலடி எடுத்து வைத்தார் நடிகர் தனுஷ்.

மார்வெல் ஸ்டுடியோஸின்  பிரம்மாண்ட சூப்பர் ஹீரோஸ் திரைப்படங்களில் ஒன்றான "அவெஞ்சர்ஸ்" எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்களின் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நெட்ஃப்லிக்ஸ்  தயாரிப்பில் ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் வெளிவர உள்ள தி க்ரே மேன் திரைப்படத்தில், அவெஞ்சர்ஸ்-ல் கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிரிஸ் எவன்ஸ் உடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது நடிகர் தனுஷுடன் இணைந்து மேலும் ஒரு இந்திய நடிகை திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இளம் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா சோனார் தி க்ரே மேன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் கப்பில் வர்மா இயக்கத்தில் வெளியான நிட்டிஷஸ்ட்ரா  இந்த குறும்படத்தில் நடிகை டாப்ஸி யுடன் இணைந்து ஐஸ்வர்யா சிவனார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.