ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். படத்தில் சின்ன கலைவானர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். இன்று வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

Dharalaprabhu Harishkalyan

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

Vivekh

மார்ச் 13-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI யூனியன் சார்பாக ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார். திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால் மீண்டும் திரைக்கு வரும் தாராள பிரபு. இதுகுறித்து நடிகர் விவேக் அவரது ஸ்டைலில் பதிவு செய்துள்ளார். போகட்டும் கொரோனா மீண்டும் தாராளப் பிரபு வரானா ரீரிலீஸ் தரானா? என்று காத்திருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு.....இப்போதைக்கு அப்பீட்டு,அப்புறமா ரிப்பீட்டு என்று கூறியுள்ளார்.