தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காடன். இதனையடுத்து  இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மோகன்தாஸ் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் F.I.R திரைப்படம் தயாராகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தை தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோ சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். F.I.R திரைப்படத்தில் நடிகைகள் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் மற்றும் ரைஸா வில்ஸன் கதாநாயகிகளாக நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது அடுத்த புதிய திரைப்படம் குறித்த முக்கிய தகவலை அறிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். புதிய படத்தை பூஜையோடு தொடங்கி இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் மற்ற விவரங்களை படத்தின் டைட்டில் முடிவானவுடன் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நல்ல எண்டர்டெயினர் திரைப்படமாக இருக்கும் இந்த படத்தின் ஸ்கிரிப்டை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படமாக்க காத்திருந்ததாகவும் , அதை ஆரம்பிக்கும் சரியான தருணம் இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புதிய திரைப்படத்தில் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான லைஃப் ஆஃப் பை (LIFE OF PI) திரைப்படத்தின் கதாநாயகியான ஸ்ரவந்தி சாய்நாத் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.