தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சக்ரா. இதனை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருக்கும் எனிமி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தொடர்ந்து இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி வரும் நடிகர் விஷால் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் “விஷால் 31 நாட் அ காமன் மேன்” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரே கட்டமாக ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு நிறைவடைந்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபலத் தெலுங்கு நடிகையான டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக நடிக்க விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் விஷால் 31 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் இப்படத்திற்கு வீரமே வாகை சூடும் என பெயரிடப்பட்டுள்ளதோடு அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியானது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.