தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் இந்த வருடம் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அரிமா நம்பி, இருமுகன் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா விஷாலுடன் அவன்-இவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக அறிமுக இயக்குனர் தூ.ப.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

பரபரப்பாக விஷால் 31 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஷால் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள நடிகர் விஷால் CCL- செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ் சினிமா நடிகர்களின் அணியான சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் யோகிபாபு உள்ளிட்ட பட குழுவினருடன் இணைந்து நடிகர் விஷால் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.