தமிழ் திரையுலகின் முன்னணி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் எனிமி தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.

தொடர்ந்து அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் தயாராகிவருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்து நடிகர் விஷால் தனது அடுத்த திரைப்படமாக விஷால் 32 படத்தை தொடங்கினார்.

விஷால் 32 படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்குகிறார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ராணா மற்றும் நடிகர் நந்தா இணைந்து தயாரிக்கும் விஷால் 32 திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு கதாநாயகியாக நடிகை சுனைனா நடிக்கிறார். இளையதிலகம் பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் விஷால் 32 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. விஷால் 32 படத்தின் டைட்டில் வெளியாகும் என்ற அறிவிப்பை இது வைக்கும் விதமாக புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.