இயக்குனர் விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமான தயாரிப்பாளர் R.B.சௌத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தமிழில் பல சூப்பர் ஹிட், மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த புரியாத புதிர், சேரன் பாண்டியன், புத்தம்புது பயணம், நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் தயாரித்தது தான்.

அதேபோல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட திரைப்படங்களும் சூப்பர் குட் பிலிம்ஸ்-இன் சூப்பர் ஹிட் திரைப்படங்களே. மேலும் தளபதி விஜய் நடித்த லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக திகழும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடிகர் விஷால் தனது இரும்புத்திரை திரைப்படத்திற்காக பெற்ற கடனுக்காக ஒப்படைக்கப்பட்ட காசோலைகளும் Bond பத்திரங்களும் கடனை திருப்பி அளித்து பல மாதங்களாகியும் இன்னும் திருப்பி தராமல் இழுத்தடித்து,தயாரிப்பாளர் R.B.சௌத்ரி பல காரணங்கள் சொல்லி வந்த நிலையில் தற்போது கடைசியாக அந்த பத்திரங்கள் தவறுதலாக எங்கோ வைக்கப்பட்டுள்ளது என்பது போல பதில் அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாததால் போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் R.B.சௌத்ரி நடிகர் ஜீவாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.தயாரிப்பாளர் R.B.சௌத்ரியின் மீது நடிகர் விஷால் இவ்வாறு புகார் அளித்திருப்பது திரையுலகினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.