மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளிவந்த உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய். தொடர்ந்து ஜெயம்கொண்டான், மிரட்டல், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனையில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக அசத்திய நடிகர் வினய் அதைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நடிகர் வினய். 

அடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் ஓ மை டாக் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார் அவரது தந்தையான விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் அருண்விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார் கோபிநாத்.S ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓ மை டாக் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்துள்ளார். இது பற்றி "கெட்டவனா இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது" என குறிப்பிட்டு ஓ மை டாக் படத்தின் தன் புகைப்படத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் வினய். வருகிற டிசம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ஓ மை டாக் திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vinay Rai (@vinayrai79)