8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் வெற்றி. 8 தோட்டாக்கள் படத்தை தொடர்ந்து வெற்றி நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ஜீவி திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

இதனையடுத்து அடுத்தடுத்து வரிசையாக  த்ரில்லர் படங்களில் நடித்து வரும் வெற்றி நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு(2021) ரிலீசான வனம் திரைப்படம் மிஸ்ட்ரி த்ரில்லர் படமாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. அடுத்தாக ஜோதி, கண்ணகி மற்றும் பம்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் வெற்றி முன்னணி கதாப்பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

முன்னதாக வெற்றி நடிப்பில் மெமரிஸ் மற்றும் ரெட் சாண்டல் ஆகிய  திரைப்படங்கள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இயக்குனர் VJ கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜீவி திரைப்படத்தின் பார்ட் 2 தற்போது தயாராகியுள்ளது. 

இயக்குனர் VJ.கோபிநாத்  இயக்கத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி 2 படத்தை முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ஜீவி 2 படத்தை தயாரித்துள்ளார்.  வெற்றியுடன் இணைந்து கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜீவி 2 படத்தின் டீசர் வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஜீவி 2 படத்தின் டீசர் இதோ…