தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா கடைசியாக நடித்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் SIMPLY FLY டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம்  நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ், கலாநிதிமாறன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், 2ND லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. மிரட்டலான இந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சூர்யா 39 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகி வரும் சூர்யா 39 படத்திற்கு ஜெய் பீம் என பெயரிடப்பட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தை கூட்டத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் THA.SE.ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் மணிகண்டன், கர்ணன் படத்தின் கதாநாயகி ராஜிஷா விஜயன், சிகப்பு மஞ்சள் பச்சை படத்தின் கதாநாயகி லிஜோ மொள் ஜோஸ் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் இணைந்து நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

மலைவாழ்  கிராமங்களையும் மலைவாழ் கிராம மக்களின் பிரச்சினைகளையும் குறித்து பேசும் திரைப்படமாக தயாராகி வரும் ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அடுத்ததாக தற்போது சூர்யா 39 திரைப்படமான ஜெய் பீம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்க வைத்துள்ளது. தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து அறிவிப்புகள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.