மிகச் சிறந்த நடிகராக, முன்னணி நட்சத்திர நாயகராக, சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா சமூக அக்கறையுடன் மக்களுக்கான நல்ல கருத்துக்களை தனது சினிமாவின் வாயிலாக நல்ல முறையில் கொண்டு சேர்த்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் படத்தைப் பார்த்த அனைவரது மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து நாளை (மார்ச் 10ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம். கடைசியாக சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீண்டும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

பின் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா சூரரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் சூர்யா மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அமல் நீரட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 8ம் தேதி) கேரளாவில் கொச்சியில் நடைபெற்ற எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், "முன்பே சென்னையில் இயக்குனர் அமல் நீரட்டை சந்தித்தபோது நடிகர் மம்முட்டியின் ஒரு திரைப்படத்தின் ரீமேக் குறித்து பேசினாம் பின்னர் அது குறித்து நான் எதுவும் முடிவு எடுக்கவில்லை, ஆனால் விரைவில் அவரை அழைத்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். கூடிய ழிய‌ர்க‌ள் அது நடைபெறும்" என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசிய வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.