கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். 

Sriman

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வைரஸ் எப்படி பரவுதுனு பாருங்க. ஜப்பானியர்கள் சக்தி வாய்ந்த கேமரா கொண்டு இதை படம் பிடித்துள்ளனர். நிலமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு அனைவரும் வீட்டில் இருங்கள். நாம் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோம் என்று பதிவு செய்துள்ளார். 

Sriman

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் அசத்தியிருந்தார் நடிகர் ஸ்ரீமன். அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.