தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹீரோ. இதனையடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. மேலும் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்ஃபிக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் அயலான்  மற்றும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.  டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியின் முதல் குழந்தையான ஆராதனா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடி தமிழ் சினிமா ரசிகர்களின் செல்ல மகளாக மாறினார். அடுத்ததாக சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது.இந்நிலையில் தனது செல்ல மகளுக்கு தற்போது பெயர் சூட்டுவிழா நடத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள சிவகார்த்திகேயன் மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள் … உங்கள் அன்போடும் ஆசையோடும் "குகன் தாஸ்" என பெயர் சூட்டியிருக்கிறோம்... எனக் குறிப்பிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ..