இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  தினசரி வருமானத்திற்கு வேலைக்குச் செல்வோரும் வார வருமானத்திற்கு வேலைக்குச் செல்வோரும்  மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்த ஊரடங்கும் காரணமாக  தமிழ்நாட்டில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தினசரி படப்பிடிப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வருமானத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இதனால் நலிவடையவுள்ள நடிகர் சங்க தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் முன்வந்து SIAA நடிகர் சங்கத்திற்குக்கு  தேவையான நிவாரண நிதி உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தென்னிந்திய நடிகர் சங்க தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜி தாஸ் அறக்கட்டளையின் சார்பில்  ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். 

முன்னதாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி செய்து இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஜெர்சி தொழிலாளர்களை கருத்தில்கொண்டு அவர்களுக்காகவும் முன்வந்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.