விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்று பின்னர் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வளர்ந்த சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், ஹீரோ என படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன். 

சிவகார்த்திகேயனின் கடின உழைப்பையும் அதற்கு அவருக்கு கிடைத்த இந்த வளர்ச்சியையும் தமிழக மக்கள் அவரவர் வீட்டில் இருக்கும் ஒருவரது வளர்ச்சியாகவே பார்த்தனர். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு பல முன்னணி பிரபலங்களின் ஊக்குவிப்பும்  சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளும் ஒரு காரணமாக அமைந்தது. கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்தி என்று திரையுலகை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் வாய்ப்பு அளிப்பதிலும் தவறியதே இல்லை. 

தன் உயிர் நண்பனும் தமிழ் திரையுலகின் நடிகரும் பாடல் ஆசிரியருமான திரு.அருண்ராஜா காமராஜ் அவர்களின் முதல் திரைப்படமான கனா திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.டிக் டாக் செயலியில் வீடியோக்கள் செய்து பிரபலமடைந்த இளைஞர் சக்தி. டிக்டாக்கில் பிரபலமான சக்திக்கு விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக அறிமுகமான சக்தி தன்  வாய்ப்பை மிக  சரியாக பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார். 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய சக்திக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் “தயவு  செஞ்சு உங்க காமெடிய கொஞ்சம் குறைச்சுக்கங்க தம்பி ரொம்ப அரத பழைய ஜோக்கா இருக்கு நாங்க எல்லாம் பாவம்” எனச் செல்லமாக கலாய்க்கிற இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயன் பேசிய அந்த தொலைபேசி அழைப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sakthi (@sakthii___)