தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாநாடு. V ஹவுஸ் புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

மாநாடு படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் மற்றும் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ் ஜே சூர்யா  மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார்.

அடுத்ததாக மூன்றாவது முறையாக சிலம்பரசன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்திருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேசன் தயாரிக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படம் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடைய நடிகர் சிலம்பரசன் கோவிலில் சிவனை வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து நன்றி இறைவா என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ...