தமிழ் திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ்  சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் திரையுலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான கே. பாக்கியராஜ் அவர்களின் மகனான நடிகர் சாந்தனு கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிகை அதுல்யா ரவி இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரித்திருக்கிறார். இயக்குனர் ஸ்ரீஜர் எழுதி இயக்கியுள்ள முருங்கைகாய் சிப்ஸ்  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இதையடுத்து பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த ஏதோ சொல்ல பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடல் வெளியானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கட்டிப்போட்ட பாடகி சிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் பாடகர் சாம் விஷால் இருவரும் இந்த பாடலின் மூலம் பாடகர்கள் அறிமுகமாகிறார்கள். 

இவர்களின் குரலில் வெளிவந்து வைரலான டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு என்ற குத்துப் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ சாங் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வைரல் வீடியோ பாடலை கீழே காணலாம்.