தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 

sathish

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு முடி வெட்டுவது மற்றும் ஷேவிங் போன்ற விஷயங்கள் மிகப்பெரிய பிரச்சனையாய் மாறியுள்ளது. பலர் தாடி மீசையுடன் முனிவர் போல் காணப்படுகின்றனர். 

Sathish

இந்நிலையில் நடிங்கர் சதிஷ் வெளியிட்ட வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. இதில் தனது தந்தைக்கு ஷேவிங் செய்து விடுகிறார். கிளீன் ஷேவில் சதீஷை விட அழகாக காணப்படுகிறார்.